நேபாளத்தில் விலை கம்மி.. கடந்த 6 மாதத்தில் பெட்ரோல், டீசல் கடத்தியதாக 84 பேர் கைது.. மத்திய அரசு தகவல்

நேபாளத்தில் விலை கம்மி.. கடந்த 6 மாதத்தில் பெட்ரோல், டீசல் கடத்தியதாக 84 பேர் கைது.. மத்திய அரசு தகவல்

நேபாளத்திலிருந்து பெட்ரோல், டீசல் கடத்தியதாக 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி சுஷில் குமார் மோடி பெட்ரோல், டீசல் கடத்தல் தொடர்பாக மத்திய அரசிடம் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமான அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கிழக்கு சாம்பரன், மேற்கு சாம்பரன் மற்றும் ஆராரியா ஆகிய மாநிலங்களில் நேபாளத்திலிருந்து பெட்ரோல், டீசல் கடத்தல் நடப்பதாக பீகார் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் விலை கம்மி.. கடந்த 6 மாதத்தில் பெட்ரோல், டீசல் கடத்தியதாக 84 பேர் கைது.. மத்திய அரசு தகவல்
சுஷில் குமார் மோடி

பீகாரில் கடந்த 6 மாதங்களில் நேபாளத்திலிருந்து பெட்ரோல், டீசல் கடத்தியதாக 84 பேர் கைது செய்யப்பட்டனர். அதேவேளையில், நேபாளத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் கடத்தப்படுவதை தடுக்க மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 245 லிட்டர் பெட்ரோல் மற்றும் 9,834 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டன.

நேபாளத்தில் விலை கம்மி.. கடந்த 6 மாதத்தில் பெட்ரோல், டீசல் கடத்தியதாக 84 பேர் கைது.. மத்திய அரசு தகவல்
நித்யானந்த் ராய்

எல்லை முழுவதும் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க இந்தோ-நேபாள படைகளுடன் சேஷஸ்தரா சீமா பால், எல்லை காவல் படை ஆகியவை பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ரோந்து, நகபாண்டி, எல்லையை தாண்டிய நபர்களை தோரயமாக மற்றும் பாதுகாபபு அமைப்புகள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் சோதனை செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டை காட்டிலும் நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளதால் பலர் அந்நாட்டிலிருந்து பெட்ரோல், டீசலை கடத்தி வருகின்றனர்.