நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்.. முதல்வர்களின் மோதலாக மாறுகிறது.. தாக்கரேவை சீண்டிய பீகார் முதல்வர்

 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்.. முதல்வர்களின் மோதலாக மாறுகிறது.. தாக்கரேவை சீண்டிய பீகார் முதல்வர்

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்தவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பாலிவுட்டில் புதிய நட்சத்திரமாக வளர்ந்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய திரைப்பட உலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கான காரணம் குறித்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் பாட்னாக காவல் நிலையத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை தனது மகனின் மரணம் குறித்து விசாரிக்கக்கோரி எப்.ஐ.ஆர். பதிவு செய்து இருந்தார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்.. முதல்வர்களின் மோதலாக மாறுகிறது.. தாக்கரேவை சீண்டிய பீகார் முதல்வர்

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க பரிந்துரைத்து பீகார் அரசாங்கம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முறையான கடிதம் அனுப்பியது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் அது பரந்ததாக இருக்கும். பீகார் அரசு தனது வழக்கறிஞர் முகுல் ரோஹதகி மூலம் சி.பி.ஐ. வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாதாடும்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்.. முதல்வர்களின் மோதலாக மாறுகிறது.. தாக்கரேவை சீண்டிய பீகார் முதல்வர்

மும்பை காவல்துறை தனது பணியை ஒழுங்காக செய்யவில்லை. பீகார் டி.ஜி.பி.யின் தொடர் அழைப்புக்கு மகாராஷ்டிரா டி.ஜி.பி. பதில் அளிக்கவில்லை.நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மும்பை காவல்துறையினர் பணியாற்றுவதில் அரசியல் தலையீடு உள்ளது. பீகாரில் இருந்து சென்ற ஐ.பி.எஸ். அதிகாரி மும்பைக்கு சென்றபோது, முதல்வர் உத்தவ் தாக்கரே ஒரு கூட்டத்தை நடத்தினார், அதனை தொடர்ந்து பீகார் அதிகாரி தடுத்து வைக்கப்பட்டார். இது ஒரு அரசியல் பிரச்சினை இல்லை என்பதால் மகாராஷ்டிரா முதல்வரிடம் பேசவில்லை. மகாராஷ்டிரா முதல்வர் என்னிடமிருந்து கற்றுக்கொண்டிருக்க வேண்டும். பீகார் முதல்வராக மூன்றாவது முறையாக நான் நிறைவு செய்ய உள்ளேன். எந்தவொரு கிரிமனல் வழக்கிலும் நான் தலையிட மாட்டேன். எந்தவொரு குற்றவாளியையும், சம்பந்தப்படுத்தவோ, பாதுகாக்கவோ இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.