அமைச்சர் மன்னிப்பு கேட்டாச்சு… அதனால் பிரச்சினையை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.. நிதிஷ் குமார்

 

அமைச்சர் மன்னிப்பு கேட்டாச்சு… அதனால் பிரச்சினையை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.. நிதிஷ் குமார்

பீகாரில் அரசு விழாவுக்கு அமைச்சர் ஒருவர் தனக்கு பதிலான தனது சகோதரை அனுப்பிய விவகாரத்தில், அமைச்சர் மன்னிப்பு கேட்டு விட்டதால் இந்த பிரச்சினை மேலும் பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் விகாஷீல் இன்சான் கட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில அமைச்சருமான முகேஷ் சைனி அண்மையில், அரசு விழாவில் ஒன்றில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்பதற்காக தனது சகோதரரை அரசு வாகனத்தில் அனுப்பி வைத்து அந்த விழாவில் கலந்து கொள்ள செய்தார். இதனை ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

அமைச்சர் மன்னிப்பு கேட்டாச்சு… அதனால் பிரச்சினையை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.. நிதிஷ் குமார்
பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம்

இது முதல்வர் நிதிஷ் குமாருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும அவரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் அமைச்சர் தனது தவறை ஒப்புக்கொண்டார் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறியதாவது: சில நேரங்களில் எல்லா விஷயங்கள் குறித்து ஒருவருக்கு தெரியாது. அவரிடம் விளக்கப்பட்டது. அவர் உணர்ந்தார் மற்றும் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

அமைச்சர் மன்னிப்பு கேட்டாச்சு… அதனால் பிரச்சினையை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.. நிதிஷ் குமார்
முகேஷ் சைனி

அரசு விழாவில் அமைச்சருக்கு பதிலாக குடும்பம் அல்லது கட்சி உறுப்பினர் கலந்து கொண்டால் அது சரியல்ல. நான் இது குறித்து முகேஷ் சைனியிடம் பேசினேன். எந்தவித உள்நோக்கத்துடன் அதனை செய்யவில்லை என்றும், அதன் விளைவுகள் குறித்து எந்த சிந்தனையும் இல்லை என்று முகேஷ் சைனி தெரிவித்தார். அமைச்சரின் நலம விரும்பிகள், கட்சி தொண்டர்கள் எந்த விழாவுக்கும செல்லலாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக அமைச்சரின் பிரநிதியாக எந்தவொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது. இந்த விவகாரத்தை (முகேஷ் சைனி) எனது பார்வைக்கு கொண்டு வந்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. அமைச்சர் மன்னிப்பு கேட்டு விட்டார் மற்றும் இது போன்று மறுபடியும் நடக்காது என்று உறுதியளித்துள்ளதால் இந்த விவகாரத்தை மேலும் பெரிதுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.