மின்சாரத்துக்கும் ஒரே நாடு ஒரே விலை கொள்கை… பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கோரிக்கை

 

மின்சாரத்துக்கும் ஒரே நாடு ஒரே விலை கொள்கை… பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கோரிக்கை

நாடு முழுவதுமாக மின் கட்டணத்துக்கு, ஒரே நாடு ஒரே விலை கொள்கையை கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்று நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஊடகங்களிடம் பேசுகையில் கூறியதாவது: நேற்று (சனிக்கிழமை) நடந்த நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில், மின்சாரம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம். நாடு முழுவதும் மின்சாரத்துக்கு ( மாநிலங்களுக்கு மத்திய அரசு சப்ளை செய்யும் மின்சாரத்துக்கு கட்டணம்) அனைவரும் ஒரே கட்டணத்தை செலுத்தினால் நன்றாக இருக்கும். தற்போது வரை நாங்கள் சில மாநிலங்களை காட்டிலும் அதிகமாக செலுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்சாரத்துக்கும் ஒரே நாடு ஒரே விலை கொள்கை… பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கோரிக்கை
நிதிஷ் குமார்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 6வது நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: 2005ம் ஆண்டில் பீகார் 700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தியது. ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் இந்த நிலை மாறி விட்டது. 2020 ஜூன் மாதத்தில் 5,932 மெகா வாட் பயன்படுத்தி உள்ளோம். மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களால் வழங்கப்படும் மின்சாரத்தின் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

மின்சாரத்துக்கும் ஒரே நாடு ஒரே விலை கொள்கை… பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கோரிக்கை
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

ஒரே நாடு ஒரே விலை என்ற ஒரு சீரான கொள்கை இருக்க வேண்டும். பீகார் அதிக விலையில் மின்சாரத்தை வாங்குகிறது. இதனால் மின் விநியோக நிறுவனங்களுக்கு அரசு அதிக மானியம் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு குறைவான விலையில் மின்சாரம் கிடைக்கும். நாடு முழுவதும் ஒரே விலை கொள்கை பின்பற்றப்பட்டால் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.