Home அரசியல் மீண்டும் ஆட்சியில் அமர வைத்தால் ஒவ்வொரு விவசாய நிலத்துக்கும் நீர் கிடைக்கும்... நிதிஷ் குமார் வாக்குறுதி

மீண்டும் ஆட்சியில் அமர வைத்தால் ஒவ்வொரு விவசாய நிலத்துக்கும் நீர் கிடைக்கும்… நிதிஷ் குமார் வாக்குறுதி

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் வழங்குவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் உங்கள் முன் வாக்குகள் கேட்டு வரமாட்டேன் என தெரிவித்து இருந்தேன். குறிப்பிட்ட காலத்துக்குள் எனது சபத்தை நிறைவேற்றி விட்டேன் என இன்று பெருமையாக சொல்லுவேன்.

நிதிஷ் குமார்

ஒவ்வொரு பீகாரியின் வாழ்க்கையிலும் மின்சராம் புரட்சியை கொண்டு வந்துள்ளது. அக்டோபர் மாதத்துக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வாயிலாக குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவடையும். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு விவசாய நிலமும் தண்ணீர் பெறும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். இது போன்று 250 பேர் பணியமர்த்தப்படுவார்கள், சுகாதார துறையில் 4,997 மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இப்போது நாங்கள் ஒவ்வொரு நாளும் 1.20 லட்சம் பேரை பரிசோதனை (கொரோனா வைரஸ்) செய்து வருகிறோம். போதுமான அளவு படுக்கைகள் மற்றும் மருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சைக்கு 3 அடுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீடுகளுக்கு மின் இணைப்பு

முன்பு முதன்மை சுகாதார மையங்களுக்கு மாதத்துக்கு 50 பேர் மட்டுமே வந்தனர். தற்போது ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் பேர் வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொற்றுநோய் பரவல் காரணமாக நேற்று நடைபெற்ற சுதந்திர விழா அணிவகுப்பில் கண்காட்சி ஊர்திகளை நிர்வாகம் ரத்து செய்தது. மேலும் 10 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாஸ்க் அணியாமல் வந்த மக்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. வரும் அக்டோபர்-நவம்பரில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில், ரூ.118.46 கோடி செலவில் 1,143...

“என் அறிக்கை அல்ல ; ஆனால் அதில் வந்த செய்தி உண்மை தான்” : நடிகர் ரஜினிகாந்த்

உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்...

‘சென்னையில் மழை பாதிப்பு’ புகார் எண்கள் அறிவிப்பு!

மழை பாதிப்பு தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய...

அரண்மனையில் வேலை: துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் ரூ 18.5 லட்சம்

இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழும் அரண்மனை ‘வின்ஸ்டர் காஸ்ட்டில்’ என்பதாகும். மிகப் பிரமாண்டாமன இந்த அரண்மனையில் துப்புறவுப் பணியாளர்கள் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். இதில் சேர விரும்பும் பணியாளர்களுக்கு ஆங்கிலம்...
Do NOT follow this link or you will be banned from the site!