பீகாரில் கிராமங்களுக்கு நீர்பாசன வசதி, சோலார் தெருவிளக்குகள்…. வாக்குறுதிகளை அள்ளி விடும் நிதிஷ் குமார்

பீகாரில் கிராமங்களுக்கு நீர்பாசன வசதி, சோலார் தெருவிளக்குகள்…. வாக்குறுதிகளை அள்ளி விடும் நிதிஷ் குமார்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் கிராமங்களில் நீர்பாசன வசதி மற்றும் சோலார் தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் அடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் அனைத்தும் 2வது மற்றும் 3வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பீகாரில் கிராமங்களுக்கு நீர்பாசன வசதி, சோலார் தெருவிளக்குகள்…. வாக்குறுதிகளை அள்ளி விடும் நிதிஷ் குமார்
முதல்வர் நிதிஷ் குமார்

நாலந்தாவின் ஹில்சா பகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால் கிராமங்களில் சோலார் தெருவிளக்குகளை நிறுவுவோம். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு விளைநிலத்துக்கும் நீர்ப்பாசன வசதியை வழங்குவோம்.

பீகாரில் கிராமங்களுக்கு நீர்பாசன வசதி, சோலார் தெருவிளக்குகள்…. வாக்குறுதிகளை அள்ளி விடும் நிதிஷ் குமார்
நீர் பாசன வசதி

தொற்றுநோய் மத்தியில், குறைவான நேரமே உள்ளதால் பல மக்களை சந்திப்பது சாத்தியமில்லை. இருப்பினும், தேர்தல் முடிந்தபிறகு பீகார் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளேன். நான் உங்களுக்கு சொந்தமானவன். உங்களை வாழ்த்துவதற்காக மட்டுமே வந்துள்ளேன். இன்றுவரை நீங்கள் எனக்கு நிறைய மரியாதை கொடுத்திருக்கிறீர்கள். நான் இறக்கும் நாள் வரை தொடர்ந்து உங்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.