காங்கிரஸ் 55 ஆண்டுகளில் செய்யாததை மோடி அரசு வெறும் 5 ஆண்டுகளில் செய்தது… நிதின் கட்கரி

காங்கிரஸ் 55 ஆண்டுகளில் செய்யாததை மோடி அரசு வெறும் 5 ஆண்டுகளில் செய்தது… நிதின் கட்கரி

பா.ஜ.க. பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் மெய்நிகர் (ஆன்லைன் பொது கூட்டம்) கூட்டங்களை நடத்தி வருகிறது. மத்திய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஆன்லைன் பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டு மக்கள் காங்கிரசுக்கு 70 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தனர்.

காங்கிரஸ் 55 ஆண்டுகளில் செய்யாததை மோடி அரசு வெறும் 5 ஆண்டுகளில் செய்தது… நிதின் கட்கரி

நேரு முதல் மன்மோகன் சிங் வரை காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வறுமை ஒழிப்பு என்ற கோஷங்களை மட்டுமே வழங்கினர். 55 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை, ஐந்தே ஆண்டுகளில் மோடி ஜி தலைமையின் கீழ் பா.ஜ.க. அரசு செய்தது. 1947க்கு பிறகு காங்கிரஸ் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை பொருளாதார கொள்கைகளால் நாடு முன்னேற முடியவில்லை.

காங்கிரஸ் 55 ஆண்டுகளில் செய்யாததை மோடி அரசு வெறும் 5 ஆண்டுகளில் செய்தது… நிதின் கட்கரி

காங்கிரஸ் சித்தாந்தம் முற்றிலும் தோற்று விட்டது. இன்று சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் எங்கும் காணப்படவில்லை. தேசியவாதம் என்பது பா.ஜ.க.வின் முன்னுரிமை மற்றும் சித்தாந்தமாகும், மேலும் மோடி அரசாங்கம் மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுடன் கையாளும் விதத்தில் அதை வெளிப்படுத்தியது. அவர்களின் திருப்தி இப்போது முடிந்து விட்டது. மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் இரும்பு கையால் கையாளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.