5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.. நிதின் கட்கரி தகவல்

5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.. நிதின் கட்கரி தகவல்

குறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் துறையில் மட்டும் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

முதல் முறையாக ஆன்லைன் வாயிலாக 2020 ஹொராஸிஸ் ஆசிய கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: குறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் துறையில் மட்டும் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், உலகின் வாகன தயாரிப்பு மையமாக இந்தியா உருவாகும்.

5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.. நிதின் கட்கரி தகவல்
நிதின் கட்கரி

சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் கிடைத்துள்ளது. இளம் திறமையான மனிதவளம் மற்றும் மூலப் பொருட்கள் கிடைப்பு, சாதகமான மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகள் உள்ளிட்டவை முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான விருப்பமான இடமாக இந்தியாவை உருவாக்குகிறது.

5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.. நிதின் கட்கரி தகவல்
கார் தயாரிப்பு ஆலை

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்களின் பங்களிப்பை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் ஏற்றுமதியில் குறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்களின் பங்களிப்பை 48 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.