மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: நிதின் கட்கரி

 

மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: நிதின் கட்கரி

கொரோனா இரண்டாவது அலைக்காக நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 15 லட்சத்து 46 ஆயிரத்து 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்தது.

மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: நிதின் கட்கரி

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான பரிசீலனையில் மத்திய அரசு இல்லை. இருப்பினும்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தேவை, ஏழைகளின் வாழ்வாதாரத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆதலால் ஊரடங்கு இனி இல்லை” எனக் கூறினார்.