கர்நாடகாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் ! நித்யானந்தாவின் பெண் சீடர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய உத்தரவு !

 

கர்நாடகாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் ! நித்யானந்தாவின் பெண் சீடர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய உத்தரவு !

ஆசிரமத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை அடைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் ஊரடங்கு காரணமாக அகமதாபாத்தில் தங்குமிடம் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தங்களை மீண்டும் கர்நாடகா செல்ல அனுமதிக்கட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து நீதிமன்றங்களை நாடி உள்ளனர்.
சட்டவிரோதமாக குழந்தைகளை அடைத்து வைத்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஹதிஜானில் உள்ள டி.பி.எஸ் (கிழக்கு) வளாகத்தின் ஆசிரமத்தின் நிர்வாகிகள் ஸ்ரீஹரினி மற்றும் ரித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 7 அன்று மிர்சாபூர் கிராம நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. விசாரணை நிலுவையில் உள்ளதால் அவர்கள் நீதிமன்ற அனுமதியின்றி அகமதாபாத்தை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் ! நித்யானந்தாவின் பெண் சீடர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய உத்தரவு !கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதித்த பின்னர், இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டது. ஹோட்டல் நிர்வாகம் அவர்களின் அறைகளை காலி செய்யுமாறு அறிவித்தது. இதனால் அவர்கள் அகமதாபாத்தில் தங்கியிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்துமாறு நீதிமன்றத்தை நாடி உள்ளனர். ஊரடங்கு காரணமாக அகமதாபாத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் வாதிட்டனர். நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளதாடில விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை.
இந்த கட்டுப்பாட்டை நீக்கிவிட்டு, கர்நாடகாவின் பிடாடியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சென்று தங்க அனுமதிக்குமாறு நித்யானந்தாவின் சீடர்கள் இருவரும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்ற நடவடிக்கைகளில் தவறாமல் கலந்துகொள்வதாக அவர்கள் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளனர்.

கர்நாடகாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் ! நித்யானந்தாவின் பெண் சீடர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய உத்தரவு !இப்போதெல்லாம் நீதிமன்றங்கள் அவசர ஜாமீன் விண்ணப்பங்களை மட்டுமே விசாரிப்பதால், நீதிமன்றம் விசாரணைக்கான விண்ணப்பங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்பதால், பிரன்பிரியா மற்றும் பிரியாதத்வா இருவரும் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் வேண்டுகோளை விசாரித்த பின்னர், நீதிபதி ஆர் பி தோலரியா, செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு விண்ணப்பங்களை விசாரிக்கவும், அவர்களின் கோரிக்கையின் பேரில் எட்டு நாட்களுக்குள் முடிவெடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.