• April
    07
    Tuesday

Main Area

Main



தமிழ்நாட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இனி நான் அந்த பக்கமே வரமாட்டேன் - நித்தியானந்தா

Nithyananda
Nithyananda

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல சாமியார் நித்தியானந்தா. இவர் கரீபியன் தீவுகள் பகுதியில் ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப்போவதாக கதைவிட்டார். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதை நம்பி தனக்கு பதவி எல்லாம் வேண்டும் என்று எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்கள் வீடியோ வெளியிட்டனர். ஆனால், தனித் தீவு எல்லாம் வாங்கவில்லை என்றும் அகதியாகக் கூட அவரை ஏற்க முடியாது என்றும் சில நாடுகள் தெரிவித்தன. சர்வதேச போலீசாரல் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, தொடர்ந்து யூடியூபில் சத்சங்கம் நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறார். 

நித்தியானந்தா


தற்போது யூடியூபில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், “எனக்கு தமிழ்நாட்டிற்கும் சம்பந்தம் இல்லை. இனி நான் அந்த பக்கம் வர மாட்டேன். 20 ஆண்டுகால போராடத்திற்கு பிறகு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனால் தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை. 

என்னுடைய மரணத்திற்கு பின் எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளேன். தமிழக ஊடககங்களை பொறுத்தவரை நான் இறந்து விட்டேன், நான் இறந்துவிட்டால் உடல் பிடதியிலுள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்யப்படவேண்டும். இதுவே எனது கடைசி ஆசை” எனக்கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.