`அப்பு, இது ஒண்ணும் 1960 இல்ல; வாலை சுருட்டிட்டு இருங்க!’- கருப்பர் கூட்டத்தை எச்சரிக்கும் நித்யானந்தா

 

`அப்பு, இது ஒண்ணும் 1960 இல்ல; வாலை சுருட்டிட்டு இருங்க!’- கருப்பர் கூட்டத்தை எச்சரிக்கும் நித்யானந்தா

“இது ஒண்ணும் 1960 இல்ல அப்பு” என்று கூறியுள்ள நித்யானந்தா, “இந்து விரோதிகள் தங்கள் வாலை சுருட்டி உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொண்டு வாழுங்கள்” என்று கூறியுள்ளார்.

`அப்பு, இது ஒண்ணும் 1960 இல்ல; வாலை சுருட்டிட்டு இருங்க!’- கருப்பர் கூட்டத்தை எச்சரிக்கும் நித்யானந்தா

கந்தசஷ்டி குறித்து யூடியூப்பில் கருப்பர் கூட்டம் கிண்டல் செய்திருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, கருப்பர் கூட்டம் அலுவலகத்தை தமிழக அரசு மூடியது. இந்த நிலையில், கருப்பர் கூட்டத்திற்கு நித்யானந்தா கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசும் நித்யானந்தா, “சில பகுத்தறிவு கும்பல்கள் இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பதாக கங்கணம் கட்டிக்கொண்டு மற்ற சமூகங்கள், மதங்களில் எத்தனை அறிவு சாதார விஷயங்கள் இருந்தாலும் அவையெல்லாம் பார்ப்பதில்லை என நவதூவாரங்களை மூடிக்கொண்டிருக்கும் இவர்கள், இந்து மதத்தில் மட்டும் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும் கூட தின்ற பணத்துக்கு அதிகமாக கூவியே ஆக வேண்டிய கட்டாயத்தினால் தொடர்ந்து எங்கள் வாழ்க்கை முறையையும், மத உணர்வுகளையும் புண்படுத்திக் கொண்டே இருப்பதை தங்கள் வாழ்க்கையை முறையாக வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் இந்துக்களை செய்வது.

`அப்பு, இது ஒண்ணும் 1960 இல்ல; வாலை சுருட்டிட்டு இருங்க!’- கருப்பர் கூட்டத்தை எச்சரிக்கும் நித்யானந்தா

அவர்கள் சும்மா இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் போய்விட்டது. இது ஒண்ணும் 1960 இல்ல அப்பு. தேடி தேடிப் போய் ஏய்யா உட்காருற ஆப்புமேல. எல்லாம் நல்லாத்தான போய்க்கிட்டு இருக்கு. தேவையில்லாமல் சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதற்காக மக்களுடைய மத உணர்வுகளை புண்படுத்துகிறதே வேலையென்று செய்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற சமூக விரோதிகள், சட்ட விரோதிகள், இந்து விரோதிகள் தங்கள் வாலை சுருட்டி உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொண்டு வாழ வேண்டுமாறு பணி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சாஸ்திர பிரமாணத்தோடு நாம் வாழுகின்ற நம்முடைய வாழ்க்கை முறை நம்முடைய மத சுதந்திரம். இதை அவதூறு செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இந்தியா, இந்திய நாட்டின் அரசியல் சாசனம் நம்முடைய மத வழிபாடுகளை நாம் செய்வதற்கு உரிமை அளித்திருக்கின்றது. யாருடைய மத உரிமையையும் அவதூறு செய்வதற்கு உரிமை அளிக்கவில்லை. இதை எதிர்க்க வேண்டியது இந்து மதத்தில் வாழுகின்ற என்னுடைய எல்லா சீடருடைய பொறுப்பு, கடமை” என்று பேசியுள்ளார்.