• December
    15
    Sunday

Main Area

Main



நான் ஒரு பொறம்போக்கு! அவமானத்துக்கு அஞ்சுற ஆளு நான் இல்ல - நித்தியானந்தா அதிரடி

nithyananda
nithyananda

நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ந்துள்ளது. அதேசமயம் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. மேலும் ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நித்தியானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால் காவல்துறையினருக்கு டிமிக்கிக் கொடுத்துவரும் நித்தியானந்தா அவ்வப்போது யூடியூபில் தலைக்காட்டி பிரசங்கம் என்ற பெயரில் ஏதாவது உளறிக்கொண்டிருக்கிறார். 

ஈகுவடார் நாட்டில் தனித்தீவை ஒன்று வாங்கியுள்ளதாகவும், அதனை தனி நாடாக அறிவிக்கக்கோரி ஐநாவிடம் நித்தியானந்தா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துவருகின்றன. 

nithyananda

இந்நிலையில் வழக்கம்போல தற்போது சத் சங் என்ற பெயரில் பிரசங்க வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், திருவனந்தபுர நித்தியானந்தா பீடத்தின் ஆதினமாக ருத்திரகன்னியான பக்தி பிரியானந்தாவை  நியமித்துள்ளேன். நான் இல்லை என்றாலும் என்னுடை ஆசிரமங்கள் அனைத்தும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. நான் ஒரு பொறம்போக்கு என்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது. மானம், அவமானத்தை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை” எனக்கூறியுள்ளார். காவலர்களுக்கே டகால்ட்டி வேலை காட்டிவரும் நித்தியானந்தா வசமாக ஒருநாள் காவல்துறையினரிடம் மாட்டுவார் என்பது மட்டும் நிதர்சனம். 

2018 TopTamilNews. All rights reserved.