திருப்பதி ஏழுமலையான் அவதாரம் எடுத்த நித்தியானந்தா… கைலாசாவிற்கு வர பக்தர்களுக்கு அழைப்பு!

திருப்பதி ஏழுமலையான் அவதாரம் எடுத்த நித்தியானந்தா… கைலாசாவிற்கு வர பக்தர்களுக்கு அழைப்பு!

சர்ச்சைக்குரிய சாமியார் என்ற பதம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நித்தியானந்தாவிற்கு அச்சு பிசகாமல் பொருந்தும். சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் சர்ச்சைகளுடனே வாழ்ந்தும் வருகிறார். பிரபல நடிகையுடன் படுக்கையறையில் அவர் இருப்பது போல வெளியான வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். நெகட்டிவ் பப்லிஷிட்டி மூலம் பிரபலமடைவார்கள். அவர்களில் முக்கியமானவர் நித்தியானந்தா.

திருப்பதி ஏழுமலையான் அவதாரம் எடுத்த நித்தியானந்தா… கைலாசாவிற்கு வர பக்தர்களுக்கு அழைப்பு!

பெங்களூருவில் இவர் நடத்திவந்த ஆசிரமத்தில் சட்டவிரோதமான பல செயல்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல ஆசிரமத்தில் பயிலும் சிறுமிகளை மூளைச்சலவை செய்து, பெற்றோருக்கும் அவர்களுக்குமான பிணைப்பை துண்டிப்பது, பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது என எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டிருப்பவர் நித்தியானந்தா. பாலியல் வல்லுறவு வழக்கில் அகமதாபாத் போலீஸால் தேடப்படும் குற்றவாளியாகவும் இருக்கிறார்.

திருப்பதி ஏழுமலையான் அவதாரம் எடுத்த நித்தியானந்தா… கைலாசாவிற்கு வர பக்தர்களுக்கு அழைப்பு!

காவல் துறையினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தலைமறைவானார். ஆனால் இப்போது வரை அவர் எங்கியிருக்கிறார்? யாருடன் இருக்கிறார்? அவருக்கு பின்புலமாக யார் உதவி செய்கிறார்கள் உள்ளிட்ட பல கேள்விகள் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே உள்ளது. தலைமறைவான சில நாட்களிலேயே யூடியூப்பில் தோன்றி அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தார். அந்த வீடியோவில் அவர் பேசிய ஒவ்வொரு கருத்துமே அதிர்ச்சி ரகமாகவே இருந்தது.

திருப்பதி ஏழுமலையான் அவதாரம் எடுத்த நித்தியானந்தா… கைலாசாவிற்கு வர பக்தர்களுக்கு அழைப்பு!

கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கியிருப்பதாகவும், தனி நாடு அந்தஸ்து கோரி ஐநாவிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறி பகீர் கிளப்பினார். நித்தியின் அறிவிப்பை கேட்டு இங்குள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள் புகுந்து விளையாடிவிட்டனர். அதேபோல கைலாசா நாட்டில் தொழில் தொடங்கவும் நித்திக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டன. கைலாசா நாட்டிற்கென்று பிரத்யேகமாக வலைதளம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் நித்தி. இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது கைலாசாவில் ரிசர்வ் வங்கியைத் திறந்திருப்பதாகவும், பணம் என்ற பெயரில் சில தங்க நாணையங்களையும் வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

திருப்பதி ஏழுமலையான் அவதாரம் எடுத்த நித்தியானந்தா… கைலாசாவிற்கு வர பக்தர்களுக்கு அழைப்பு!

இச்சூழலில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கெட்அப் போட்டு அசத்தியிருக்கிறார். அடிப்படையில் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டவரான நித்தி ஏன் வைணவக் கடவுளான திருப்பதியை முன்னிலைப்படுத்துகிறார் என்று அவரது ஆசிரமவாசிகளுக்கே புரியவில்லையாம். இதற்கு முன்னதாக தன்னை சிவபெருமான் என்றும், தான் தான் கடவுள் என்றும் பிரகடனப்படுத்தியவர் நித்தி.

திருப்பதி ஏழுமலையான் அவதாரம் எடுத்த நித்தியானந்தா… கைலாசாவிற்கு வர பக்தர்களுக்கு அழைப்பு!

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது நாட்டுக்கு வருகை தர இ-பாஸ்போர்ட் அப்ளை செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். திருப்பதி பெருமாளுக்கு ஒரு மனித உருவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறார் என அவரது பக்தகோடிகள் சிலாகிக்கின்றனர். உடல் நிறைய பொன், மாலை சகிதமாக படோடபமாகக் காட்சியளிக்கிறார் நித்தி. பார் முழுசா கடவுளாகவே மாறிய நித்தியைப் பார்….!