• March
    29
    Sunday

Main Area

Main



நித்தியானந்தா ஆசிரமம் அதிரடியாக மூடப்பட்டது!

நித்தியானந்தா
நித்தியானந்தா

நித்தியானந்தாவின்  தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர், நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத்  உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.  ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் நித்தியானந்தா மீது பாய்ந்துள்ளது.

ttn

அதேசமயம் நித்தியானந்தா பாஸ்போர்ட் காலாவதியாகியுள்ளதால்   ஜனார்த்தனா ஷர்மா மகள் நந்திதாவுடன்  தரை வழியாக நேபாளம் சென்று, அங்கிருந்து கரீபியன் தீவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

TTN

இந்நிலையில் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. மேலும் ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

ttn

தனியார் பள்ளி செயல்பட்டு வரும் இடத்தில் சட்ட விரோதமாக ஆசிரமம் நடத்தி வந்ததாலும், ஆசிரமம் மீதான தொடர் புகார்களைத் தொடர்ந்தும்  மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.