மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதா கொண்டு வர வேண்டும்.. மத்திய அரசுக்கு நிஷிகாந்த் துபே வேண்டுகோள்

மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதா கொண்டு வர வேண்டும்.. மத்திய அரசுக்கு நிஷிகாந்த் துபே வேண்டுகோள்

பொது சிவில் சட்டம், மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதாக்களை கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஜீரோ நேரத்தில் பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே பேசுகையில், நாட்டையும், அதன் மக்கள்தொகையையும் காப்பாற்ற பொது சிவில் சட்டம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதாக்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். நிஷிகாந்த் துபே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதா கொண்டு வர வேண்டும்.. மத்திய அரசுக்கு நிஷிகாந்த் துபே வேண்டுகோள்
நிஷிகாந்த் துபே

பட்டியல் பழங்குடி (எஸ்.டி.) தனது மதத்தை பட்டியல் சாதி (எஸ்.சி.) போல மாற்றினால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கக்கூடாது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது ஒரு டிரெண்டாக மாறி விட்டது. மத மாற்றம், மக்கள் தொகை மாற்றங்கள் மற்றும் வாக்கு வங்கி அரசியல் ஆகியவை செயலில் இறங்குகின்றன. கொரோனா வைரஸ் காலத்தில் நாம் பார்த்தது, இந்த நாடு தற்போது முழுமையான மக்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதா கொண்டு வர வேண்டும்.. மத்திய அரசுக்கு நிஷிகாந்த் துபே வேண்டுகோள்
மக்கள் தொகை கட்டுப்பாடு

இல்லையெனில் முழு மக்கள் தொகையும் மாறும் மற்றும் நாட்டின் ஜனநாயகமும் ஆபத்தில் இருக்கும். பல பங்களாதேஷ்களும் இங்கு குடிமக்களாக மாறுவார்கள். இப்போது பொது சிவில் சட்டத்துக்கான நேரம். ஒரு சி.ஆர்.பி.சி. மற்றும் குற்றங்களை செய்யும்போது அவர்களின் மதத்தை பொருட்படுத்தாமல் அவர்களை ஒரே சட்டத்தின்கீழ் கையாள வேண்டும். நாட்டின் நாகரித்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.