நிசர்கா புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது! 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை!

நிசர்கா புயல்  இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது! 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை!

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும். இது வரும் 3 ஆம் தேதி மகாராஷ்டிரா மாற்று குஜராத் நோக்கி செல்லும் என்றும் கூறியது.

நிசர்கா புயல்  இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது! 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை!

இதை தொடர்ந்து அரபிக்கடலில் நேற்று நிசர்கா புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தீவிர புயலாக மாறி மும்பையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 215 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 440 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

நிசர்கா புயல்  இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது! 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை!

இந்நிலையில் நிசர்கா புயல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது. அப்போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.