கடந்த காலத்தை போல பொதுமுடக்கம்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

 

கடந்த காலத்தை போல பொதுமுடக்கம்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவிவரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக தடுப்பூசி திருவிழாவை மத்திய அரசு நடத்திவருகிறது.

கடந்த காலத்தை போல பொதுமுடக்கம்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்நிலையி; உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் காணொலி மூலம் உரையாடிய நிர்மலா சீதாராமன், இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் அதனைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா தொற்று மோசமான நிலையில் இருந்தாலும், பெரிய அளவில் கடந்த காலத்தைப் போல பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது. ஏனெனில் பொருளாதாரத்தை மீண்டும் முழுமையாக முடக்க மத்திய அரசு விரும்பவில்லை

ஆனால் உள்ளூர் கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளோம். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பரிசோதனையை அதிகரிப்பது, நோய் பாதிப்பைக் கண்டறிதல், உடனடி சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்துதல், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடத்தை விதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட 5 திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” எனக் கூறினார்.