• February
    29
    Saturday

Main Area

Main



குடியுரிமை திருத்த சட்டம் குடியுரிமை கொடுக்கும் சட்டம்; குடியுரிமையை பறிக்கும் சட்டமல்ல-  நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

குடியுரிமைச் திருத்தச் சட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது. சென்னை குடிமக்கள் முகமை மற்றும் நியூ இந்திய முகமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், பாஜக செய்தி தொடர்பாளர், SG.சூர்யா எழுதிய குடியுரிமை சட்ட திருத்தம் 360 என்ற புத்தகத்தை வெளியிடப்பட்டது. 

நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், “நம் நாட்டில் 1955ல் இருந்து குடியுரிமை சட்டம் இருந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தால் முன் உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. 2019 திருத்த சட்டத்தில்  சில மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதனால் இதனை அமல்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. குடியுரிமை சட்டம் திருத்தம், குடியுரிமை கொடுக்கும் சட்டம் ; அது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல. குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. 

nirmala sitharaman

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முழு விளக்கம் நாடாளுமன்றத்தில் கொடுத்த பின்னரும், அரசியலுக்காக பேசுகிறார்கள். அரசியலமைப்பு சட்டம் 370 இல் உள்ளபடி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க முடியும், ஆனால் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற பேதங்களை தீர்க்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில்  இருந்து இங்கு வந்தது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை, மனிதம் பற்றிப் பேசுபவர்களுக்கு இதெல்லாம் தெரியப் போவதில்லை” என கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.