புரளி கிளப்புவதில் எதிர்க்கட்சியினர் வல்லுநர்கள் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

புரளி கிளப்புவதில் எதிர்க்கட்சியினர் வல்லுநர்கள் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு விவசாய தலைவர்களுடன் வேளாண் சட்டம் குறித்து விளக்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது வாய்ப்புகளை தேடி தேடி சீர்திருத்தம் மேற்கொண்டார். கொரோனா காலத்திலும் கடுமையான பாதிப்புகளுக்கு இடையே விவசாயிகள் உயிரையும் பொருட்படுத்தாமல் விளைவித்தனர். கொரோனாவால் மற்ற துறைகள் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு ஊரக பகுதிகளில் உற்பத்தியால் முழுமையாக மீண்டு வருகிறது. அதே போல் கொரோனா காலத்தில் பல சவால்களை சந்தித்தாலும் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். விவசாயிகளுக்கு உரிமையை பெற்றுத்தரவே இந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

புரளி கிளப்புவதில் எதிர்க்கட்சியினர் வல்லுநர்கள் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அனைத்து தொழிலிலும் உற்பத்தி செய்பவர்கள் விலையை நிர்ணயிக்க முடியும். ஆனால் விவசாயிகள் மட்டும் தங்கள் உற்பத்திக்கான விலையை நிர்ணயிக்க முடியாது. பஞ்சாப், ஹரியானாவில் உள்ள ஒரு வியாபாரியிடம் தமிழக விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. சந்தையில் விளை பொருட்களை விற்பதற்கு 8.5% வரி விதிக்கப்படுகிறது. மேலும், இடைத்தரகர்களுக்கு கமிஷன் வழங்கவேண்டும். எந்த மாநிலத்திலும் மொழி திணிக்கப்படுவதில்லை. நாட்டில் விவசாயிகளின் உழைப்பால் பஞ்சம், பசி இல்லை. பல்வேறு பொருட்கள் உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யபடுகிறது. விவசாயிகளை காப்பாற்றும் வேளாண் சட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்,புரளி கிளப்புவதில் எதிர்க்கட்சியினர் வல்லுநர்கள். குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் அதில் மாற்றமில்லை, படிப்படியாக குறையும் எனது உண்மையல்ல. இங்கு விற்கக்கூடிய விளை பொருட்கள் இந்தியாவில் எங்கு சென்றலும் கூடுதல் வரி கிடையாது, அங்கு உள்ளூர் வரி இங்குள்ளவர்களுக்கு கிடையாது. இணையம் மூலமாக பதிவு செய்து அங்கு பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கு விற்கலாம்.” எனக் கூறினார்.