விஜய் மல்லையா உள்ளிட்டோர் சட்டத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வருகிறார்கள்.. நிர்மலா சீதாராமன் தகவல்

விஜய் மல்லையா உள்ளிட்டோர் சட்டத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வருகிறார்கள்.. நிர்மலா சீதாராமன் தகவல்

விஜய் மல்லையா உள்பட தப்பியோடிய தொழிலதிபர்கள் சட்டத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கு திரும்பி வருகிறார்கள் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று காப்பீடு திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷி அனைவரும் சட்டத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கு திரும்பிகிறார்கள் என்று தெரிவித்தார்.

விஜய் மல்லையா உள்ளிட்டோர் சட்டத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வருகிறார்கள்.. நிர்மலா சீதாராமன் தகவல்
நிர்மலா சீதாராமன்

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது மாமா சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.14,500 கோடி கோடியை மோசடி செய்து கடனை வாங்கி விட்டு அதனை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடினர். நீரவ் மோடி தற்போது இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமனற்ம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அவரை இங்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விஜய் மல்லையா உள்ளிட்டோர் சட்டத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வருகிறார்கள்.. நிர்மலா சீதாராமன் தகவல்
மெகுல் சோக்ஷி, நீரவ் மோடி

நீரவ் மோடி மாமா மெகுல் சோக்ஷி தற்போது ஆண்டிகுவாவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மதுபான தொழிலில் கொடி கட்ட பறந்த விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் மொத்தம் சுமார் ரூ.9 அயிரம் கோடி கடனை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் இருந்து வந்தார். வங்கிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தொடங்கியவுடன், தான் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்த மல்லையா கடந்த 2016ம் ஆண்டுக்கு இங்கிலாந்துக்கு தப்பியோடினார். தற்போது விஜய் மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.