பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க தயார்… நிர்மலா சீதாராமன் தகவல்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க தயார்… நிர்மலா சீதாராமன் தகவல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது தொடர்பாக அடுத்த ஜி.எஸ்.டி.கவுன்சிலில் கூட்டத்தில் விவாதிக்க மத்திய அரசு தயார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் மீதான வரி அதிகமாக இருப்பதால் அதன் விலை அதிகமாக உள்ளது. இதனால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கையும் வரவில்லை என்ற மத்திய அரசு விளக்கம் கொடுத்து இருந்தது. இந்த சூழ்நிலையில், ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க தயார்… நிர்மலா சீதாராமன் தகவல்
ஜி.எஸ்.டி.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் பேசுகையில் கூறியதாவது: நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிகம் வரி விதிக்கப்படுகிறது. ஒரு மாநிலம் அதிகம் அல்லது குறைய வரி விதிக்கிறது என்று நான் குறிப்பிடவில்லை. மத்திய அரசும் மட்டும் வரி விதிக்கவில்லை மாநில அரசுகளும் வரி விதிக்கிறது என்பதுதான் விஷயம்.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க தயார்… நிர்மலா சீதாராமன் தகவல்
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

மத்திய அரசும் வரி விதிக்கிறது, மாநில அரசுகளும் வரி விதிக்கிறது. எரிபொருள் வரி குறித்து இந்த அக்கறை இருந்தால், இன்றைய விவாதத்தின் அடிப்படையில் நான் நேர்மையாக நினைக்கிறேன், பல மாநிலங்கள் இதை பார்த்து கொண்டே இருக்கும். அடுத்த ஜி.எஸ்.டி.கவுன்சிலில் கூட்டத்தில் இந்த விவாதம் (ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல்,டீசல்) வந்தால், அதை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைவேன், அதை பற்றி விவாதிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.