புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி- நிர்மலா சீதாராமன்

பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டம் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இடம் பெயர் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பொதுப் பணித்துறை மூலமாக வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய திட்டம் கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டம். ஜூன் மாதம் 20ஆம் தேதி பீகாரில் முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்.

பொருளாதார இழப்பை சீர்செய்ய மத்திய – மாநில‌ அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகின்றன. புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்பட்டன. 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெற்றனர். புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் வகுக்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார இழப்பை சரிகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....