‘எனக்கும் அதுல தர்மசங்கடம் தான்’ – மனம் திறந்த நிர்மலா சீதாராமன்!

 

‘எனக்கும் அதுல தர்மசங்கடம் தான்’ – மனம் திறந்த நிர்மலா சீதாராமன்!

எரிவாயு விலை அதிகரிப்பதில் தனக்கும் தர்மசங்கடம் தான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.22க்கு விற்பனையாகிறது. இது போதாதென்று, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாதத்திற்கு ஒருமுறை சிலிண்டர் விலை மாற்றிமைக்கப்படும் என்ற நிலைமாறி தற்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

‘எனக்கும் அதுல தர்மசங்கடம் தான்’ – மனம் திறந்த நிர்மலா சீதாராமன்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, டெலிவரி பணத்துடன் சேர்ந்து ரூ.800ஐ எட்டியிருப்பதால் இல்லத்தரசிகள் கதறிக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் மட்டும் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதன் காரணம் என்னவென எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இவை எல்லாவற்றுக்கும் முந்தைய ஆட்சிகளே காரணம் என பிரதமர் மோடி அந்தர் பல்டி அடித்து விட்டார்.

‘எனக்கும் அதுல தர்மசங்கடம் தான்’ – மனம் திறந்த நிர்மலா சீதாராமன்!

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசல் விலை உயர்வில் எனக்கும் தர்ம சங்கடம் தான். இதைக் கட்டுப்படுத்த வரி குறைப்பு குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்க முடியும். என்னால் ஏதும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.