டி.ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன்!

 

டி.ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன்!

பொருளாதார வளர்ச்சி குறித்து மக்களவையில் திமுக எம்பி டி.ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர் பாலு நேற்று மக்களவையில் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பொருளாதார பின்னடைவுகளை சந்திக்க மத்திய அரசு உரிய முயற்சிகளை எடுத்துள்ளதா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார்.

டி.ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன்!

இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 – 22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 14 சதவீதம் பொருளாதார உற்பத்தி பெருக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது அலையின் காரணமாக 9.5% மட்டுமே பொருளாதார மொத்த உற்பத்தி பெருக்கம் இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது உணவு தானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவை கையிருப்பில் உள்ளதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.