• April
    05
    Sunday

Main Area

Main



பிப்ரவரி 1ம் தேதியன்று குற்றவாளிகள் தூக்கிலிட்டப்பட்டால் மட்டுமே நான் திருப்தி அடைவேன்... நிர்பயா தாயார் ஆவேசம்....

ஆஷா தேவி
ஆஷா தேவி

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22-ம்தேதி தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது தூக்குதண்டனையை குறைக்கக்கோரி குடியுரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். இதனால் அவர்களின் தூக்கு தண்டனையை டெல்லி நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதேசமயம், குற்றவாளியின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, நிர்பாய பாலியல் பலாத்கார சம்பவத்தின் போது தான் சிறுவனான இருந்ததால் தனது சிறார் சட்டப்பிரிவின்கீழ் தண்டனை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான். ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனால் குற்றவாளிகள் 4 பேரும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிடுவது உறுதியாகி விட்டது. 

குற்றவாளி பவன் குமார் குப்தா

 
நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி இது குறித்து கூறுகையில், தூக்கு மேடையிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்ளும் மோசமான வடிவமைப்பு முடிந்தது. தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் அவர்களின் தந்திரத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி அவர்கள் தூக்கிலிட்டப்பட்டால் மட்டுமே நான் திருப்தி அடைவேன். அவர்கள் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தூக்கு தண்டனை தாமதப்படுத்தியது போல், அவர்களை ஒருவர் பின் ஒருவராக தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் சட்டத்துடன் விளையாடியதன் அர்த்தம் புரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.