• April
    04
    Saturday

Main Area

Main



நிர்பயா வழக்கு குற்றவாளி அக்சய் தாக்கூர் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க கடைசி முயற்சி! உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

அக்சய் தாக்கூர்
அக்சய் தாக்கூர்

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதியன்று குற்றவாளிகள் 4 பேரையும்  தூக்கிலிட நீதிமன்றம் புதிய டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதிலிருந்தும் தப்பிக்கும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நாளை  (இன்று) வழங்குவதாக அறிவித்தது.

முகேஷ் சிங்

இந்நிலையில் நிர்பயா வழக்கின் மற்றொரு குற்றவாளியான அக்சய் தாக்கூர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் curative மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தகவலை திஹார் சிறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளில் அக்சய் தாக்கூரோடு சேர்த்து இதுவரை 3 பேர் curative மனு தாக்கல் செய்துள்ளனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.