நாடு கடத்தப்படுகிறார் நிரவ் மோடி… இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

 

நாடு கடத்தப்படுகிறார் நிரவ் மோடி… இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி செய்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி. அவர் செய்த குற்றம் கண்டுபிடித்த உடன் அவர் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். இந்தியா எவ்வளவு முயற்சித்தும் இரு வருடங்களாக அவரைப் பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு காவல் துறை நிரவ் மோடியை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிரடியாகக் கைதுசெய்தது. இதையடுத்து அவரைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு சிபிஐயும் அமலாக்கத் துறையும் இங்கிலாந்திடம் வலியுறுத்திவந்தன.

நாடு கடத்தப்படுகிறார் நிரவ் மோடி… இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

நிரவ் மோடி ஒப்படைப்பு தொடர்பான வழக்கு லண்டன் வெட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் நடைபெற்றுவரும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்துவந்தது. நிரவ் மோடி தனக்கெதிரான வழக்கை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே ஒப்படைப்பு வழக்கில் வெளியான தீர்ப்பையும் தனது உடல்நலத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தினார். (சொந்த நாட்டின் அடக்குமுறைக்கு அஞ்சி சம்பந்தப்பட்டவர் தற்கொலை செய்யும் ஆபத்து இருந்தால் அவரை ஒப்படைப்பிலிருந்து தடுக்கலாம் என்ற இங்கிலாந்து ஒப்படைப்பு சட்டம் (2003) ஜூலியனுக்குப் பயன்படுத்தப்பட்டது)

நாடு கடத்தப்படுகிறார் நிரவ் மோடி… இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

இதனால் இந்திய தரப்புக்கு நம்பகத்தன்மையை நிரூபிக்க அழுத்தம் அதிகரிக்கப்பட்டது. அதேசமயம் நிரவ் மோடியின் பாதுகாப்பு குறித்த அனுசரணையும் அவர் இந்தியாவிடமிருந்து தப்பிக்க மற்றொரு காரணமாக இருந்தது. வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து இந்திய தரப்பில் நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன. விசாரணைக்கு நடுவே சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய வழக்குகளும் பதியப்பட்டன. இதையும் வெட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ சமர்பித்தது.

நாடு கடத்தப்படுகிறார் நிரவ் மோடி… இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

இரு தரப்பு வாதங்களையும் முழுவதுமாகப் பதிந்துகொண்ட நீதிபதி சாமுவேல் கூஸ் பிப்ரவரி 25ஆம் தேதி, அதாவது இன்று தீர்ப்பு வாசிக்கப்படும் என்று கூறியிருந்தார். இன்று வாசிக்கப்பட்ட தீர்ப்பில், நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்துக்கு உத்தரவிட்டார். மேலும் இத்தீர்ப்பில், “நிரவ் மோடி புரிந்த பண மோசடி தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்கள் திருப்திகரமாக உள்ளன. அவர் குற்றவாளி என்பதற்கான போதுமான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

நாடு கடத்தப்படுகிறார் நிரவ் மோடி… இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

அதேசமயம் நிரவ் மோடியின் உடல் மற்றும் மனநலத்தைக் கருத்தில் கொண்டு அவர் மிகவும் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்படுவார் என்ற இந்தியாவின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. லண்டனை விட மகாரஷ்டிராவிலுள்ள பராக் 12 சிறை அதிக வசதிகள் வாய்ந்த சிறையாக இருக்கிறது. ஆகவே அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இத்தீர்ப்பு பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரித்தி படேலின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவரின் முடிவைப் பொறுத்து இரு தரப்பும் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.