Home சினிமா ’டிப்ளமேஸின்னா அர்த்தம் தெரியுமா?’ வேல்முருகன் மீது மொழி வன்முறை! பிக்பாஸ் 19-ம் நாள்

’டிப்ளமேஸின்னா அர்த்தம் தெரியுமா?’ வேல்முருகன் மீது மொழி வன்முறை! பிக்பாஸ் 19-ம் நாள்

பலர் ஆடும் விளையாட்டின் விதிகளுக்குள் ‘நீ மட்டும் ஒசத்தியோ!’ எனும் கொஞ்சம் பொறாமையைக் கலந்துவிட்டால், ஆட்டம் சூடு பிடிக்கும் என்பதை அறியாதவரா பிக்பாஸ். ரொம்ப அழகாக பத்த வெச்சிருக்கார். அதற்கான விளைவுகளை இன்றே பார்க்க முடிந்த எப்பிசோட்.

பிக்பாஸ் 19- ம் நாள்

’அப்பாடா… ஒருவழியாக பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக அஜித் பாடல் ஒலித்தது. ’ஆலுமா டோலுமா… ‘ ஒரே ஸ்டெப்ஸில் ஆட ட்ரை பண்ணிட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் ஷிவானி தனிஆவர்த்தனம் செய்திட்டு இருந்தார்.

‘நீ பெரிய ஜோசியம் காரணாமே’ என்று கிச்சன் கேபினட் சண்டைக்கு ஆஜித்தை இழுத்துக்கொண்டிருந்தார் சுரேஷ். அவருக்கு என்ன சொல்கிறார்… எதைப் பற்றி கேட்கிறார் என்று புரியவில்லை. முதன்நாள் விளையாட்டில் சுரேஷ் ஜெயிப்பார் என்று ஆஜித் யூகித்ததை விசாரிக்கிறாராம். சாரே… 60 கிட்ஸ் லாங்வேஜ்ல கேட்டா எப்படி? ஆஜித் 2k கிட்ஸ்.

’ஓகே… சோபா நிரப்புங்க’ என பிக்கியின் ஆர்டருக்கு ஓடிவந்தார்கள். ‘நாடா… காடா?’ சில எதிர்பார்த்த விருதுகள். ’டாஸ்க்கில் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் யார்?’ ஒவ்வொருத்தர் பேரா சொல்ல, சிலர் பிகு செய்ய… ‘எனக்காவது கொடுங்களேன்’ என வாய்விட்டே கேட்டார். ’ஒரு மனுஷன அழ விட்டாயா’ பார்ப்பீங்க.

’அர்ச்சனா, பாலா இருவரும் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்க்கும், முழு ஈடுபட்டோடு என ஷனம் தேர்வானார்கள். ‘ஆமா… உயிரக்கொடுத்து சண்ட போட்டிருக்கேன். கப்பு எனக்குத்தான்… என்ற திருப்தியோடு ஏற்றுக்கொண்டார். மூவரும்தான் அடுத்த வார தலைவருக்கான போட்டியாளர்களாம். பாலாவுக்கு ஷனமுக்கும் ஆகாது. இப்போ, அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் ஆகாது என்று தெரிஞ்சிடுச்சு. நிச்சயம் போட்டி விறுவிறுப்பா இருக்கும். பிக்கி உங்களுக்கு கண்டண்ட் கன்ஃபார்ம்.

’போரிங்’ ஆட்டக்காரர் விருது யாருக்கு எனக் கேட்டார் பிக்பாஸ். (CSK டீம்ல சாம் கரண் தவிர எல்லோரும்தான் பாஸ்) இதற்கு ரியோ சொன்ன யோசனை பின்னால் வரவிருந்த சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைச்சது. அதாவது ஒவ்வொருவரும் இரண்டு பேரை நாமினேட் செய்யணும். அதிக ஓட்டுகள் விழுந்தவங்க. ஜெயிலுக்கு போகனும். ‘ஆரி, ஆஜித்’ பட்டியலைத் தொடங்கி வைச்சார் பாலா. அனிதா, ஷிவானி இரு பெண்களுக்கு மட்டுமே ஓரிரு ஓட்டுகள் விழுந்தன. சுரேஷை நாமினேட் செய்து ‘த்ரிச்சு பழைய பன்னீர்செல்வமா வரணும்’ என்றார் ரியோ. ‘தாங்க மாட்டீங்கடா… தாங்க மாட்டிங்க’ என மம்மூட்டியின் மைண்ட் வாய்ஸில் ரியாக்ஸன் காட்டினார் சுரேஷ்.

இறுதியாக, அதிக ஓட்டுகள் வாங்கிய ஆரி, ஆஜித் இருவரும் ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்பப்பட்டார்கள். ‘நல்லவானா ஜெயிலுக்குப் போறேனா… ஜெயிலுக்குப் போயிட்டு நல்லவனா வாரேன்னா’னு இன்றைக்கு தெரிஞ்சுடும்’ என பஞ்ச் டயலாக் பேச ட்ரை பண்ணினார். இப்படி சொதப்பலான பஞ்சுக்கே இன்னும் ரெண்டு நாள் அங்கேயே போடலாம் பாஸ்.

’நிறைய பாடுடா… அதுதான் உன் பலம்’ என ஆஜித்க்குச் அட்வைஸினினார் ரம்யா. அவர் ‘ம்..ம்ஹூம்’ என்பதுபோல கேட்கிறாரா… இல்லையா… என யூகிக்க முடியாத ரியாக்‌ஷனைத் தந்தார்.

‘ரியோவை அந்த குரூப் காப்பாத்தறாங்க’ என்று மெல்ல உருவாகி வரும் குரூப்பிஸ கிசுகிசுவைத் தொடங்கி வைத்தார் அனிதா. நாமினேட் பண்ணின பாலாவும் கைக்கோர்த்து கிசுகிசுத்தனர்.

‘முத்தமிழை ஒன்று, இரண்டு என்று வரிசைப்படுத்து’ என்ற ஒளவை பாட்டியாட்டம் ’பிக்பாஸ் வீட்டில் 1 லிருந்து 16’ என வரிசைப்படுங்க.. 1-ம் வது தேர்ந்தெடுக்கப்படுபவர் ‘பிக்பாஸ் வின்னர்’ என்பதை ஞாபகத்துல வெச்சிக்கோங்க’ என்றதும், எல்லோர் கண்களில் ஏக்கம் எட்டிப் பார்த்தது.

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸில் பகடையை உருட்டும் பொறுப்பை சுரேஷ் எடுத்துக்கிட்டதைப்போல இந்த டாஸ்கில் முந்திக்கொண்டார் அர்ச்சனா. முதல் விக்கெட்டாக சுரேஷை 16-ம் இடத்துக்கு நாமினேட் செய்ய… ‘ஏகபட்ட கை உயர்த்தலுக்குப் பிறகு’ தெரிஞ்சது தானே என்பதைப் போல ஏற்றுக்கொண்டார் சுரேஷ்.

15 வது ஆளுக்கு ‘பாலா’ என அர்ச்சனா காய் நகர்த்த, ஓட்டுகள் கிடைக்க வில்லை. ‘ஓஹோ வீட்டுக்குள் பாலாவுக்கு அவ்வளவு சப்போட்டா?’ என அர்ச்சனா மைண்ட் வாய்ஸ் ஒலித்தது.

பாலா எழுந்து, ‘வேல்முருகன்’ பேரைச் சொன்னார். ‘என்னையே ஏன் டார்கெட் பண்றீங்க’ என்றார் வேல்ஸ். ‘நீங்க டிப்ளமேஸியா இருக்கீங்க’ என்றதும், அதற்கு ‘நான் என்ன செஞ்சேன்’ எனக் கேட்ட வேல்முருகனைப் பார்த்து டிப்ளமேஸி’ என்பதற்கு அர்த்தம் தெரியுமா? என்று வார்த்தையால் சூடு வைத்தார். (இது பற்றி கடைசியில் தனியே பார்ப்போம்)

சம்யுக்தா, ‘டாப் 8; பாட்டம் 8’ போட்டியாளர்ன்னு பிரிச்சுகிடலாம்’ என்று நல்ல ஐடியா சொன்னார். அதன்படி பிரிக்கப்பட்டு, 15-ம் இடம் ’ஷனம்’க்கு கிடைக்க, ‘ஒரு மாடல்ன்னு மரியாதை இல்லாம, இவ்வளவு லாஸ்ட் ப்ளேஸா?’ என்று முகத்தை வெச்சுகிட்டு போய் நின்றார்.

14-ம் இடம் சம்யுக்தாவுக்கு, 13-வது இடம் வேல்முருகனுக்கு, பாலா சொன்ன விஷயத்தை வேற வார்த்தையில சொன்னார் ரம்யா. 12 இடம் சோம்ஸ்க்கு. அதற்கான காரணத்தை அனிதா சொன்னதுதான் ட்விஸ்டே.

பாட்டம் 8 போட்டியாளர்களில் தான் வந்ததே அர்ச்சனாவுக்கு பெரிய ஷாக். அப்படி வந்ததில் ஒரு சிக்கல் இருந்தது. முதலில் சில பேரைக் கேட்டதும். டாப் 8… டாப் 8 என்று சொல்லி 8 பேரை முதலில் வைத்து விட்டார்கள். லேட்டாக அர்ச்சனா பேரைச் சொல்லும்போது டிக்கெட் காலி என்பதுபோல டாப் 8 பட்டியல் நிரம்பியிருந்தது.

’நான் கோவப்பட்டா, தப்புங்கிறாங்க… ரியோவைக் கோப முகத்தை மறைக்கிறது சரின்னு சொல்றாங்க… அர்ச்சனா பாகுபாடு காட்டுறாங்க (!)’  என்றார் பாலா. ‘தல… நீங்க சொன்னதை திரும்ப கேளுங்க.. இரண்டு ஒண்ணும்தானே?”   ஒருவழியாக 11-ம் இடம் அர்ச்சனாவுக்குப் போனது.

10-ம் இடம் ஆரிக்கு.  ’இன்னும் கீழே அனுப்புவீங்கன்னு நினைச்சேன்’ முகத்தில் சின்ன ஆசுவாசத்தைக் காட்டினார் ஆரி. அனிதா 9-ம் இடம். அவருக்கான புகார் பட்டியலை வாசித்தது ஷனம். ‘சரி… சரி… அதான் என்ன ப்ளேஸ்னு சொல்லிட்டீங்களே… அப்பறம் என்ன?’ என்பதை ஷார்ட்டாக ‘தேங்க்ஸ் ஷனம்’ என்றார் அனிதா பல்லைக் கடித்துக்கொண்டே.

வீட்டில் இருக்காரா இல்லையான்னு தெரியாது. பிக்பாஸ் தாடியை ஷேவ் பண்ண சொன்னால், கேட்க மாட்டார் ஜித்தன் ரமேஷ். அவருக்கு எட்டாம் இடமா? ரொம்ப ஓவரு.

7-ம் இடம் நிஷாவுக்கு. அர்ச்சனாவுக்குச் சொன்ன காரணத்தையே, பட்டி டிக்கரிங் பார்த்து ‘ஒரு தலை பட்சமா இருக்காங்க நிஷா’ என்று சொன்னார் பாலா. 6-ம் இடம் ஆஜித்க்கு. காலில் அடிபட்டிருந்ததால் சோபாவிலேயே உட்கார்ந்துகொண்டார்.

பொத்தி பொத்தி வைக்கப்பட்ட ரியோ 5-ம் இடத்துக்கு செலக்ட் செய்யப்பட்டதும், அர்ச்சனா – நிஷா கண்களில் சற்று அதிர்ச்சி. ரியோவுக்கான புகார் பெட்டிஷனை வாசித்தவர் சம்யுக்தா. கேபி, பாலா, ஷிவானி, ரம்யா நால்வரில் யாருக்கு எந்தெந்த இடங்கள் என போட்டி வலுவானது.

4- வது இடத்துக்கு கேபி செலக்ட்ச் செய்யப்பட்ட, ஒருவித அதிருப்தியோடு போய் நின்றுகொண்டார். ஒருவேளை ஃப்ர்ஸ்ட் ப்ளேஸ்க்கு ஆசைபட்டிருப்பாரோ. அடுத்து பாலாவுக்கு ஓட்டு எண்ணலாம் என்று அர்ச்சனா சொன்னது ‘ஸ்மார்ட் மூவ்வா?’ என்று கொக்கி போட்டார் பாலா. உண்மையில் அர்ச்சனாவுக்கு அப்படி ஓர் ஐடியா இருந்திருக்குமா என்று யூகிக்க முடியவில்லை. ஏனெனில், அவர் காப்பாற்ற நினைக்கிற ரியோ ஏற்கெனவே 5-ம் இடத்திற்குச் சென்றுவிட்டார். ஷிவானி, ரம்யாவை முதலிடத்திற்கு கொண்டுச் செல்ல அவர் முயற்சி எடுப்பார் என்று தோன்ற வில்லை.

சிறிதுநேர சலசலப்புக்குப் பிறகு பாலா மூன்றாம் இடத்துக்குத் தேர்வானார். ரியோவை விட இவர் முன்னிலையான இடத்தில் இருப்பது சரியான வரிசை அல்ல. ஷிவானிக்கும் ரம்யாவுக்கும் டென்ஷன் ஒட்டிக்கொண்டது.

2-ம் இடத்துக்கு ஷிவானிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க, ரம்யா முதல் இடத்தைத் தட்டிச் சென்றார். ரம்யா முதலிடம் – பலருக்கு ஆச்சர்யமில்லை. சிலருக்கு விருப்பமில்லை. ஆனாலும் பெரும்பாலானோர்க்கு எதிர்ப்பு இல்லை என்பதே யதார்த்தம். ’ரம்யா உங்களுக்குப் பெரிய பரிசு காத்திருக்கு’ என்று பிக்கி சொன்னதும் ரம்யா முகத்தில் சிரிப்பு பூத்தது.

’எவிக்‌ஷன் ப்ரீபாஸ்’  எப்படி ஒரு ஸ்மார்ட் மூவ் விளையாட்டாக மாற்றப்பட்டதோ அதைபோலவே இதுவும் மாற்றப்பட்டது. இரண்டிலுமே யார் அப்படி மாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு வெற்றி கிடைக்க வில்லை. இரண்டிலும் ரம்யாவுக்குப் பலன் கிடைத்தது. சென்ற சீசனில் தர்ஷனை இப்படிச் சொல்லியே உசுப்பேத்தினார்கள். இந்த சீசனில் ரம்யாவா?

கடைசி பந்தில் வெற்றியைக் கோட்டை விட்ட ஏமாற்றம் ஷிவானியின் முகத்தில் அப்படமாகத் தெரிந்தது. 16 பேரில் ஐந்தாறு பேரின் நிலைமையும் இதுதான். அனிதா, ரியோ, அர்ச்சனா எல்லாம் தங்களை டாப் 3 போட்டியாளர்கள் என நினைத்திருக்கலாம். இந்த வரிசைப்படுத்தல் என்னென்ன சண்டைகளுக்கு வித்திடபோகிறதோ?

‘கிராமத்துலேருந்து வந்திருக்கேன்னு சொன்னபிறகும் டிப்ளமேஸிக்கு அர்த்தம் கேட்டது எல்லாம் உன் திமிர்த்தனம்’ என்று பாலாவைச் சரியாகக் கொட்டினார் சுரேஷ். அதற்கு விதை போட்டது கேபியாம். சுரேஷை மறுத்து பாலா ஏதோ சொல்ல எழுந்து வெளியே போய்விட்டார்.

’டிப்ளமேஸிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?’ என்று பாலா கேட்டதும் வேல்முருகன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையே. இங்கிலீஷ் தெரிந்தால் உசத்தியா… ஏற்கெனவே தாழ்வுமனப்பான்மையில் உள்ள வேல்முருகனை இன்னும் கீழே அழுத்தியிருக்கும் பாலாவின் கேள்வி. அந்தக் கேள்வி கேட்டதும் ‘பார்த்தீங்களா’ என்று கேட்டுவிட்டு கூனிகுறுகிவிட்டார் வேல்முருகன். இது ஒருவகையில் மொழி ஆதிக்கமே.

ஆனால், சுரேஷ், ஷன, கேபி என அந்த ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டு வேல்முருகன் பக்கம் நின்றது… ரொம்ப லேட்டாக என்றாலுமே ஆறுதல். ஏனென்றால், இந்த வார்த்தையால் பாலா அடிக்கடி வேல்முருகனைக் காயப்படித்தியிருப்பார் போல. மதியமே ஷனமிடம் அந்தச் சொல்லுக்கு அர்த்தம் கேட்டிருக்கிறார். அதை திரும்ப சொல்லக்கூட முடியவில்லை அவரால். பாலா ஸாரி கேட்கும்போதுகூட ‘டிப்ளமேஸின்னா… இருக்கு, ஆனா இல்லை’ என்பதா என்றார் வெள்ளந்தியாக. ஆனாலும், இப்படிக் கேட்டவரிடம் சண்டை போடும் துணிச்சல் வர வில்லை. அந்தளவுக்கு தாழ்வுணர்ச்சியால் அழுத்தப்பட்டிருந்தார் வேல்முருகன்.

கமல் தனது படங்களில்கூட ஆங்கிலம் தெரியாதவர்கள் மீது சுமத்தப்படும் தாழ்வுணர்ச்சியைக் கோடிட்டி காட்டிருப்பார். மைக்கேல் மதனகாமராஜனில் ‘கேட்ச் மை பாயிண்ட்’ காட்சியே அதற்கு நல்ல உதாரணம். அதனால், இந்த வாரம் கமல் பஞ்சாயத்தில் இது இடம்பெறும் என நம்புவோம்.

பிக்பாஸ் வீட்டில் மணி 12 ஆகியும் லைட் எரிந்தால், யாருக்கோ பிறந்த நாள் என்று அர்த்தம். ஜித்தன் ரமேஷ்க்கு கேக் அனுப்பியிருந்தார் பிக்கி. ஜீவா வீடியோவில் வாழ்த்து சொன்னார். ஆஜித் அம்மாவுக்கும் பிறந்த நாள் என்பதால், ’நீயே… நீயே..’ எனும் பாடலைப் பரிசாக அனுப்பினார் ஆஜித். ரம்யா சொன்னதுபோல தினமும் ரெண்டு பாட்டை எடுத்து விடு கண்ணா… நடிக்க வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ பாட்டு பக்கம் வண்டியை ஓட்டிடலாம்.

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

பதினாறு | பதினேழு | பதினெட்டு | பத்தொன்பது | இருபது

மாவட்ட செய்திகள்

Most Popular

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர்(104). வயது மூப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் காலமானார். இவரது மறைவுக்கு இரங்கல்...

காங்கிரஸ் தவழுவதற்கு எடப்பாடியிடம் பாடம் படித்திருக்கிறது- கமல்ஹாசன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே...

குன்னூரில் இரவில் சாலையில் உலா வந்த புலி… பொதுமக்கள் பீதி…

நீலகிரி நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவில் சாலையில் உலா வந்த புலியால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரை ஓட்டியுள்ள...

தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார்

46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார் அஜித்குமார். நடிக்க வருவதற்கு முன்பே பைக்...
TopTamilNews