“பாஜகவால தான் தோத்து போனோம்.. அதுக்கு நான் தான் கிடச்சேனா” – அதிமுக அமைச்சர் பகீர் பேச்சு!

“பாஜகவால தான் தோத்து போனோம்.. அதுக்கு நான் தான் கிடச்சேனா” – அதிமுக அமைச்சர் பகீர் பேச்சு!

எடப்பாடி, ஓபிஎஸ் தவிர்த்து 28 அமைச்சர்களில் 3 பேரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூவரில் நிலோபர் கபிலும் ஒருவர். தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபில் வாணியம்பாடி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறை மக்களவை தேர்தலில் அவர் சரியாகப் பணியாற்றவில்லை என்பதால் தான் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் கேசி வீரமணி உடனான பிணக்கும் மற்றொரு காரணம் என்றனர். அதனை நிலோபர் கபிலே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

“பாஜகவால தான் தோத்து போனோம்.. அதுக்கு நான் தான் கிடச்சேனா” – அதிமுக அமைச்சர் பகீர் பேச்சு!

வாணியம்பாடி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய அமைச்சர் கேசி வீரமணி திட்டமிட்டே எனக்கு சீட் தரக்கூடாது என கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளார். அதனால் தான் எனக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அதேபோல துரைமுருகனுக்கும் வீரமணிக்கும் மாமன் மச்சான் உறவு போய்க்கொண்டிருக்கிறது.

“பாஜகவால தான் தோத்து போனோம்.. அதுக்கு நான் தான் கிடச்சேனா” – அதிமுக அமைச்சர் பகீர் பேச்சு!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் இஸ்லாமிய சமுதாய மக்கள் பாஜகவை ஏற்கவில்லை. இதனால், வாக்குகள் சரிந்தன. இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்னால் முடிந்த அளவுக்கு நான் தேர்தல் பணியாற்றினேன். வாக்குப்பதிவு நடைபெறும் பூத்திலேயே நான் அமர்ந்திருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அமைச்சர் கேசி வீரமணி அப்படியா தேர்தல் பணியாற்றினார்?” என்றார்.