நீலகிரி- மலை ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்

நீலகிரி- மலை ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்

நீலகிரி

நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு, மலை ரயில் பாதையில் லாரி கவிழ்ந்தது.
கோவை காரமடையில் இருந்து, ஊட்டிக்கு சரக்குகளை ஏற்றி வந்த லாரி, இன்று

நீலகிரி- மலை ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்

காலை குன்னூர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு மலை ரயில் பாதையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சரவணன், மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இதனால், மலைப்பாதையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியை கிரேன் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி- மலை ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்

தற்போது மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், லாரி மீட்கப்பட்டதும் ரயில் பாதை சீரமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை கேற்கொண்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான லாரி விழுந்த இடத்தில் இருந்து, சற்று தள்ளி 300 அடி பள்ளம் உள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.