“நீலகிரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில், நுண் பார்வையாளர் மூலம் கண்காணிப்பு”

 

“நீலகிரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில், நுண் பார்வையாளர் மூலம் கண்காணிப்பு”

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அரசு விருந்தினர் மாளிகையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ராகுல் திவாரி, பனுதர்பகேரா, சவ்ரப் பஹரி, காவல்துறை பார்வையாளர் ரஞ்சித்குமார் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

“நீலகிரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில், நுண் பார்வையாளர் மூலம் கண்காணிப்பு”

இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் மொத்தம் 868 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதாகவும், இதில் 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பதற்றமான வாக்குச்சாவடி தொடர்பாக ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கும்படி இந்த கூட்டத்தில் கேட்டுகொள்ளப்பட்டதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் வெப் கேமரா மூலம் பதிவுசெய்யப்படும் என்றும், மேலும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் இன்னசென்ட் திவ்யா கூறினார்.