“நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் நேரடியாக கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம்”- நீலகிரி ஆட்சியர்!

 

“நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில்  நேரடியாக கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம்”- நீலகிரி ஆட்சியர்!

நீலகிரி

நீலகிரி மாட்டத்தில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசின் கொரோன நிவாரண பொருட்கள் நேரடியாக சென்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட சாந்தூர், கேத்தி, தொரை மற்றும் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மஹாராஜா, மணியபுரம் மற்றும் நெடிகாடு ஆகிய இடங்களில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை நேற்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, நோய்க்கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள பொதுமக்கள் வெளியே வருகிறார்களா என்பதையும், வெளியாட்கள் உள்ளே வருகிறார்களா? என அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.

“நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில்  நேரடியாக கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம்”- நீலகிரி ஆட்சியர்!

மேலும், வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும்போது சளி, காய்ச்சல் போன்ற 13 அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும், உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், நோய் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தமிழக அரசு இரண்டாம் தவணை கொரோனா நிவாரணம் ரூ.2,000, 14 வகையான மளிகை பொருட்களை குடியிருப்பு பகுதிகளுக்கே வந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள பொதுமக்கள் வெளியில் வந்தால், உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.