நீலகிரி: வளர்ச்சி, கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

நீலகிரி: வளர்ச்சி, கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி: வளர்ச்சி, கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்தின் போது, நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் அதிகளவில் தொற்றுகள் கண்டறியப்பட்ட பகுதிகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொண்டு செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நீலகிரி: வளர்ச்சி, கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

அதனை தொடர்ந்து, விவசாய சங்க பிரதிநிரிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.