‘தடுப்பூசி போடலன்னா டாஸ்மாக்கில் மது கிடையாது’ – ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

 

‘தடுப்பூசி போடலன்னா டாஸ்மாக்கில் மது கிடையாது’ – ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வருவதற்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருக்கும் தமிழக அரசு ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் அமைத்தும் 24 மணி நேர தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறார்கள்.

‘தடுப்பூசி போடலன்னா டாஸ்மாக்கில் மது கிடையாது’ – ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

அரசு அலுவலர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதே போல, தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், தடுப்பூசி போடவில்லை என்றால் டாஸ்மாக்கில் மது கிடையாது என நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘தடுப்பூசி போடலன்னா டாஸ்மாக்கில் மது கிடையாது’ – ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

டாஸ்மாக்கில் மதுபானம் வாங்குவதற்கு முதல் டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் மதுபானம் விற்பனை இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், நீலகிரி மக்கள் 97 சதவீத பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் மதுபானம் என்ற உத்தரவு கேரளாவில் ஏற்கனவே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.