காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்!

 

காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் இன்றுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது. இந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கேரள சட்டமன்றத் தேர்தலில் நிலம்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்!

ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட பிரகாஷுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்துள்ளது. அவரது வெற்றியைக் கொண்டாட தொண்டர்கள் காத்துக் கிடந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். பிரகாஷின் மரணம் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் மீது நாட்டம் கொண்ட பிரகாஷ், தான் கல்லூரி பயிலும் போது கேரள மாணவர் ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவர், மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.