என்.ஐ.ஐ.டி. லாபம் ரூ.46.5 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

 

என்.ஐ.ஐ.டி. லாபம் ரூ.46.5 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

என்.ஐ.ஐ.டி. நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.46.5 கோடி ஈட்டியுள்ளது.

திறன்கள் மற்றும் திறமை மேம்பாட்டு நிறுவனமான என்.ஐ.ஐ.டி. தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. என்.ஐ.ஐ.டி. நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.46.5 கோடி ஈட்டியுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் என்.ஐ.ஐ.டி. நிறுவனம் நிகர லாபமாக ரூ.60 லட்சம் ஈட்டியிருந்தது.

என்.ஐ.ஐ.டி. லாபம் ரூ.46.5 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
நிதி முடிவுகள்

2021 மார்ச் காலாண்டில் என்.ஐ.ஐ.டி. நிறுவனம் நிகர வருவாயாக ரூ.275.5 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர வருவாயாக ரூ.211.2 கோடி ஈட்டியிருந்தது. என்.ஐ.ஐ.டி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நிறுவன பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 வழங்க பரிந்துரை செய்துள்ளது.

என்.ஐ.ஐ.டி. லாபம் ரூ.46.5 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
என்.ஐ.ஐ.டி.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, என்.ஐ.ஐ.டி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 11.86 சதவீதம் உயர்ந்து ரூ.221.25 ஆக அதிகரித்தது.