“வாங்க குடிக்கலாம் ,கூத்தடிக்கலாம்”-வாட்ஸ் அப்பில் வந்த அழைப்பு -சமூக இடைவெளி இல்லாமல் குடித்த பலர் கைது..

 

“வாங்க குடிக்கலாம் ,கூத்தடிக்கலாம்”-வாட்ஸ் அப்பில் வந்த அழைப்பு -சமூக இடைவெளி இல்லாமல் குடித்த பலர் கைது..

இப்போது உலகில் கொரானா பரவி லட்சக்கணக்கானோர் இறந்த நிலையில் , பிளேக் பெயரில் டெல்லியில் ஒரு நைட் க்ளப் ஆரம்பித்து, அதில் சமூக இடைவெளி இல்லாமல் குடித்த 31 பேரை போலீஸ் கைது செய்தது அங்கு பரபரப்புக்குள்ளானது .

“வாங்க குடிக்கலாம் ,கூத்தடிக்கலாம்”-வாட்ஸ் அப்பில் வந்த அழைப்பு -சமூக இடைவெளி இல்லாமல் குடித்த பலர் கைது..

டெல்லியில் திங்களன்று “பிளேக் என்ற நைட் க்ளப்” வாட்ஸ் அப் மூலம் பலருக்கு மெசேஜ் அனுப்பி தங்களின் நைட் க்ளப்பில் நடைபெறும் இரவு விருந்தில் கலந்து கொள்ள அழைத்திருந்தது .இதனால் அந்த நைட் க்ளப்பிற்கு பல வாலிபர்களும் .தொழிலதிபர்களும் ஒன்று கூடினார்கள் .அதற்கு பிறகு அவர்களுக்கு அங்கு ஹூக்கா மற்றும் மதுபானம் வழங்கப்பட்டது.அந்த மதுவினை வாங்கி அனைவரும் குடித்து கும்மாளமிட்டு கொண்டிருந்தார்கள் .

“வாங்க குடிக்கலாம் ,கூத்தடிக்கலாம்”-வாட்ஸ் அப்பில் வந்த அழைப்பு -சமூக இடைவெளி இல்லாமல் குடித்த பலர் கைது..அப்போது திடீரென ஒரு போலீஸ் ஜீப் அங்கு வந்தது .அதிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் வேகமாக உள்ளே வந்தனர் .உள்ளே வந்த போலீஸ் அங்கு சமூக இடைவெளி இல்லாமல் குடித்து கும்மாளமிட்டு கொண்டிருந்த 31 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் .மேலும் அங்கிருந்த பல மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தார்கள் .

“வாங்க குடிக்கலாம் ,கூத்தடிக்கலாம்”-வாட்ஸ் அப்பில் வந்த அழைப்பு -சமூக இடைவெளி இல்லாமல் குடித்த பலர் கைது..இப்போது கொரானா டெல்லியில் வேகமாக பரவி வரும் வேலையில் இது போல பார்ட்டிகள் ,கொண்டாட்டங்களில் மக்கள் கூட தடை இருக்கும் போது, அதை மீறி அந்த “பிளேக்” என்ற நைட் க்ளப் இப்படி பார்ட்டி நடத்தியதால் போலீசார் அந்த நைட் க்ளப்பை மூடினார்கள் .மேலும் இந்த விருந்தில் கலந்து கொண்ட கிளப்பின் உரிமையாளர் லாவிஷ் குரானா மற்றும் அவரது சகோதரர் காஷிஷ் குரானா என்ற இரு சகோதரர்கள் மீதும் கலால் சட்டம், தொற்றுநோய்கள் நோய் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.