“நைட் 10 மணிக்கு மேல ஒரு வண்டி ரோட்டுல நிக்க கூடாது… மீறுனா நாங்க பொறுப்பில்ல” – காவல் ஆணையர் எச்சரிக்கை!

“நைட் 10 மணிக்கு மேல ஒரு வண்டி ரோட்டுல நிக்க கூடாது… மீறுனா நாங்க பொறுப்பில்ல” – காவல் ஆணையர் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அதிதீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊடரங்குடன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதுதொடர்பாகப் பேசிய சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், “இன்றில் இருந்து இரவு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ளது. ஊரடங்கு கண்காணிப்புப் பணியில் 2 ஆயிரம் காவலர்காள் ஈடுபடுவார்கள்.

“நைட் 10 மணிக்கு மேல ஒரு வண்டி ரோட்டுல நிக்க கூடாது… மீறுனா நாங்க பொறுப்பில்ல” – காவல் ஆணையர் எச்சரிக்கை!

சென்னையில் 200 இடங்களில் காவல் துறையினர் வாகனச் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கியச் சாலைகளில் காவல் துறை வாகனச் சோதனை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். மேம்பாலங்கள் மூடப்படும். இரவு 10 மணிக்கு வாகன சோதனைகளைத் தொடங்கி விடுவோம். அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். உத்தரவை மீறி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

“நைட் 10 மணிக்கு மேல ஒரு வண்டி ரோட்டுல நிக்க கூடாது… மீறுனா நாங்க பொறுப்பில்ல” – காவல் ஆணையர் எச்சரிக்கை!

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழை வைத்திருந்தால் போதும். காவல் துறையினரிடம் காட்டினால் அனுமதிக்கப்படுவார்கள். ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்பவர்கள் பயண டிக்கெட் காட்டினாலே போதும். காவல் துறை அனுமதிப்பார்கள். சென்னை மக்கள் இரவு முழு ஊரடங்கிற்கும் முழு ஊரடங்கிற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்களுக்கு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை” என்றார்.