‘தமிழகத்தில் லாக்டவுன்’.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

 

‘தமிழகத்தில் லாக்டவுன்’.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வரும் நிலையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்தது. வார இறுதியில் கடற்கரைகளுக்கு செல்ல தடை, ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு, திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு கட்டுப்பாடுகள், எல்லா இடங்களிலும் 50% மக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட அந்த புதிய கட்டுப்பாடுகள் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன.

‘தமிழகத்தில் லாக்டவுன்’.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டும் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை என்றால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இது குறித்து இன்று காலை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அந்த முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் இரவு நேர லாக்டவுனை அமல்படுத்துவது குறித்து விரைவில் முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

‘தமிழகத்தில் லாக்டவுன்’.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

இதில் ஒரு சிக்கல் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசு முடிவெடுக்க இயலாத சூழல் உள்ளதாக தெரிகிறது. அண்மையில், கொரனோ ஆய்வுக் கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியது. விதிகள் தளர்த்தப்பட்டாலும் முடிவுகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவைப்படுகிறதாம்…!