புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்- தமிழிசை சவுந்தரராஜன்

 

புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்- தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்- தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 வாரத்தில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பு மீண்டும் தலைதூக்குவதால் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துவருகின்றன. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனிடையே புதுச்சேரியில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 708 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 42 ஆயிரத்து 595 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவிருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார். அதன்படி இரவு 8 மணிவரை மட்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்றும், 8 மணிக்கு மேல் பார்சலுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.