பிரிட்டனில் புதிய வைரஸ் எதிரொலி: மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு

 

பிரிட்டனில் புதிய வைரஸ் எதிரொலி: மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு

மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்த மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், அங்கு படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் அடுத்த 6 மாதங்களுக்கு பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிட்டனில் புதிய வைரஸ் எதிரொலி: மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு

இந்நிலையில் பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரிட்டன் – இந்தியா இடையிலான விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கிவருதால் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதிலும் உள்ள முக்கியமான நகரங்களில் நாளை முதல் ஜனவரி 5 அம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.