கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு!

 

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு!

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம் ,தமிழகம் ,மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 40ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் கொரோனா வேகமாக பரவுவதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்திவருகின்றன.

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு!

இந்நிலையில் பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்கு பின், கர்நாடகாவில் 7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 10 முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர
ஊரடங்கு அமலில் இருக்கும் என முதலமைச்சர்
எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரு, மைசூரு, கல்பர்கி, தும்கூர், உடுப்பி, பிடார், மணிபால் மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.