கோவையில் போலி வெளிநாட்டு கரன்சிகளை மாற்ற முயன்ற, நைஜீரிய இளைஞர் கைது!

 

கோவையில் போலி வெளிநாட்டு கரன்சிகளை மாற்ற முயன்ற, நைஜீரிய இளைஞர் கைது!

கோவை

கோவையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி வெளிநாட்டு கரன்சிகளை மாற்ற முயன்ற நைஜீரிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் காட்டூர் பகுதியில் பிரபல தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த நிறுவனத்திற்கு வந்த நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னிடம் இருந்த அமெரிக்க டாலர்களை, இந்திய ரூபாயாக மாற்றித் தருமாறு ஊழியர்களிடம் கூறினார்.

கோவையில் போலி வெளிநாட்டு கரன்சிகளை மாற்ற முயன்ற, நைஜீரிய இளைஞர் கைது!

அவரிடம் இருந்து பெற்ற டாலர் நோட்டுகளை ஊழியர்கள் சோதனை செய்தபோது, அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நைஜீரிய இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவரது பெயர் ஓகுபோர் நாதன் என்பதும், போலி டாலர்களை மாற்ற முயற்சித்த போது போலீசிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து அடையாள அட்டைகள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.