பங்குச் சந்தையில் ரூ.78 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்ததகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. ஆசிய பங்குச் சந்கைளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. டாக்டர்ரெட்டீஸ் உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. இம்மாதம் 25ம் தேதி முதல் உள்நாட்டில் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க இருப்பதால் இன்டர்குளோப், ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி., ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோமோட்டோகார்ப், மாருதி, பஜாஜ் ஆட்டோ மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்டஸ்இண்ட் வங்கி, என்.டி.பி.சி., பஜாஜ் பைனான்ஸ் மற்றும் எச்.டி.எப்.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,330 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 910 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.122.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.78 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 114.29 புள்ளிகள் உயர்ந்து 30,932.90 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 39.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,106.25 புள்ளிகளில் முடிவுற்றது.

Most Popular

`வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!’- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் கணவனை மனைவி பிரிந்து சென்றார். தனியாக இருந்த கணவன் ஏரியா தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன்...

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...