ஸ்வப்னா சுரேஷை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல்!

 

ஸ்வப்னா சுரேஷை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல்!

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்க கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது.

ஸ்வப்னா சுரேஷை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல்!

தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர்மல்க பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், அந்த ஆடியோவில், எனக்கும் அந்தப் பார்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறியிருந்தார். இதை தொடர்ந்து ஸ்வப்னாவை தேடி வந்த கேரள காவல்துறையினர், நேற்று முன்தினம் பெங்களூருவில் வைத்து அவரை கைது செய்தனர். தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ் கொச்சியில் உள்ள என். ஐ. ஏ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ் கொச்சியில் உள்ள என். ஐ. ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஸ்வப்னா சுரேஷ்க்கு, சந்தீப் நாயருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்வப்னா சுரேஷை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல்!

இந்நிலையில் தங்க கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்வப்னாவுடன் கைது செய்யப்பட்ட சந்தீப்பையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி நீதிமன்றத்தில் கேட்டுள்ளது. இருவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்த நிலையில் அவர்களை காவலில் எடுக்க என்ஐஏ முடிவு செய்துள்ளது.