தள்ளுபடியால் வந்த வினை… என்.எச்.பி.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.833 கோடியாக குறைந்து போச்சு…

தள்ளுபடியால் வந்த வினை… என்.எச்.பி.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.833 கோடியாக குறைந்து போச்சு…

2020 ஜூன் காலாண்டில் என்.எச்.பி.சி. நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.855.49 கோடி ஈட்டியுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் நீர்மின் உற்பத்தி நிறுவனமான என்.எச்.பி.சி. தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் என்.எச்.பி.சி. நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.855.49 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 13 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.989.27 கோடி ஈட்டியிருந்தது.

தள்ளுபடியால் வந்த வினை… என்.எச்.பி.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.833 கோடியாக குறைந்து போச்சு…
என்.எச்.பி.சி.

என்.எச்.பி.சி. நிறுவனத்தின் லாபம் குறைந்தற்கு மின் விநியோக நிறுவனங்களுக்கு அந்நிறுவனம் வழங்கி தள்ளுபடியே காரணம். கடந்த ஜூன் காலாண்டில் என்.எச்.பி.சி. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,914.02 கோடியாக உயர்ந்துள்ளது. என்.எச்.பி.சி. நிறுவனம் தனது அறிக்கையில், மின் உற்பத்தியும், ஹைட்ரோமின்சாரம் விற்பனைதான் நிறுவனத்தின் முக்கிய வருவாய் ஆதாரம்.

தள்ளுபடியால் வந்த வினை… என்.எச்.பி.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.833 கோடியாக குறைந்து போச்சு…
மின் விநியோக கட்டமைப்பு

கோவிட்-19 பரவலின் போது மத்திய அரசு அறிவித்த லாக்டவுனால் வர்த்தகம் பொதுவாக பாதித்தது. மத்திய நிதியமைச்சகம் கடந்த மே15 மற்றும் 16ம் தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்க, மின் விநியோக நிறுவனங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின் துறைகளுக்கு ஒரு முறை தள்ளுபடியாக மொத்தம் ரூ.185 கோடியை தள்ளுபடி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.