NGK திரைப்படத்தின் டீஸர் பற்றி நடிகர் கார்த்தி என்ன சொன்னாரு தெரியுமா?

 

NGK திரைப்படத்தின் டீஸர் பற்றி நடிகர் கார்த்தி என்ன சொன்னாரு தெரியுமா?

நடிகர் கார்த்தி ngk டீசரை பார்த்து வெறித்தனமா இருக்கு உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

சென்னை: நடிகர் கார்த்தி ngk டீசரை பார்த்து வெறித்தனமா இருக்கு உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் NGK. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பக்க பட்ட நிலையில் இயக்குநர் செல்வராகவன் உடல் நிலை சரி இல்லாமல் படம் தள்ளி போனது. 

பின்பு இப்படத்தின் அப்டேட் விடுமாறு நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வெய்துவந்தனர். அதை எர்த்தா அப்படக்குழுவினர் ngk படத்தின் டீஸர் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. 

இந்நிலையில், என்.ஜி.கே டீசர் குறித்து நடிகர் கார்த்தி பதில் தெரிவித்துள்ளார். அதில், “என்ஜிகே டீசர் பாத்துட்டேன். வெறித்தனமா இருக்கு” என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்திற்காக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு இது மேலும் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.