ஐபிஎல் வீரர்கள் சிலருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டம்

 

ஐபிஎல் வீரர்கள் சிலருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டம்

ஐபிஎல் போட்டிகள் பற்றிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பரவத் தொடங்கி விட்டன.

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் வீரர்கள் சிலருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டம்

தோனி, ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பு வந்ததும், அவர்களின் ஆட்டத்தைக் காணும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அதற்கு சரியான தீனியை ஐபிஎல் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று விட்டன. தனிப்பட்ட காரணங்களால் ஹர்பஜன் சிங், மலிங்கா உள்ளிட்ட சில வீரர்கள் இன்னும் ஒரு வாரத்தில் அங்கு செல்வார்கள்.

சில வெளிநாட்டு அணிகள் வேறு போட்டிகளில் ஆடிவருவதால், சில வீரர்கள் போட்டி தொடங்கி ஓரிரு வாரங்கள் கழித்து இணைவார்கள். இதனால்தான் ஐபிஎல் போட்டிக்கான ஷெட்யூல் இன்னும் முடிவு செய்யப்பட முடியாத நிலையில் இருப்பதாக ஐபிஎல் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஐபிஎல் வீரர்கள் சிலருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டம்

ஐபிஎல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும்போதே கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டே அனுமதிக்கப்பட்டார்கள். மேலும், கொரோனா டெஸ்ட் மீண்டும் எடுக்கப்பட்டே ஐபிஎல் போட்டியில் ஆட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில், அவசியம் தேவைப்பட்டால் ஐக்கிய அமீரகத்தின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் உதவியைப் பெறுவார்கள் என்று தெரிகிறது. அதன்படி, 50 ஐபிஎல் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஊக்கமருந்து சோதனையை எளிமையாக நடத்து வழிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.