மாஜி எம்.பி.யும், நடிகையுமான ‘ஊர்வசி’சாரதா பற்றி பரவும் செய்தி; அவரே அளித்துள்ள விளக்கம்

 

மாஜி எம்.பி.யும், நடிகையுமான ‘ஊர்வசி’சாரதா பற்றி பரவும் செய்தி; அவரே அளித்துள்ள விளக்கம்

நான் உயிருடன் நலமாக இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான ‘ஊர்வசி’சாரதா(76) தெரிவித்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக இரண்டு தினங்களாக பரவும் செய்திகளுக்கு நலமுடன் இருப்பதாக அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.

மாஜி எம்.பி.யும், நடிகையுமான ‘ஊர்வசி’சாரதா பற்றி பரவும் செய்தி; அவரே அளித்துள்ள விளக்கம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாரதா. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஆறு படங்களை இவரே தயாரித்திருக்கிறார். இவர் பிறந்தது ஆந்திரா என்றாலும் வளர்ந்தது சென்னையில்தான்.

1960 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகை ஊர்வசி சாரதா. 1963 ஆம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ’குங்குமம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் மூன்று முறை ஊர்வசி விருது பெற்றிருக்கிறார். தேசிய அளவில் சிறந்த நடிகை என்று கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்பட்ட ஊர்வசி விருதை மூன்று முறை பெற்றுள்ளார். அதனால் இவர் ’ஊர்வசி’ சாரதா என்று அழைக்கப்பட்டு வந்தார். என்னைப்போல் ஒருவன், துலாபாரம் ,ஞான ஒளி மிஸ்டர் பாரத் என்று ஏராளமான படங்களில் நடித்து வந்தார். ஆந்திர பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது .

மாஜி எம்.பி.யும், நடிகையுமான ‘ஊர்வசி’சாரதா பற்றி பரவும் செய்தி; அவரே அளித்துள்ள விளக்கம்

1972ஆம் ஆண்டு அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் சுயம்வரம் என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். அதற்காக சாரதாவுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது ஊர்வசி பட்டம் கிடைத்தது. 1978 ஆம் ஆண்டில் சர்ச்சின் நாராயணா இயக்கத்தில் ’நிமஞ்ஜனம்’ எனும் தெலுங்கு படத்தில் நடித்ததற்காக மூன்றாவது முறையாக ஊர்வசி விருது பெற்றார்.

1975ஆம் ஆண்டில் வெளிவந்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் எம்ஜிஆரின் தங்கையாக ஊனமுற்ற பெண்ணாக நடித்திருந்தார் சாரதா. எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கத்தில் உருவான ’புது செருப்பு கடிக்கும்’ என்ற படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்திருந்தார் சாரதா. ரஜினிகாந்துடன் ஒரு கன்னட படத்தில் ஜோடியாக நடித்திருந்த சாரதா, பின்னர் மிஸ்டர் பாரத் படத்தில் அவருக்கு தாயாக நடித்தார்.

மாஜி எம்.பி.யும், நடிகையுமான ‘ஊர்வசி’சாரதா பற்றி பரவும் செய்தி; அவரே அளித்துள்ள விளக்கம்

1996 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தெனாலி தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரும் ஆனார். என்டி ராமராவ் என்னை அரசியலுக்கு வரச்சொன்னார். பயம் காரணமாக அப்போது அரசியலில் ஈடுபடவில்லை. அவர் இல்லாத போது தான் அரசியலுக்கு வந்தேன். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து நான் பிறந்த ஊரான தெனாலியில் போட்டியிட்டு எம்பி ஆகியிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் நடிகை சாரதா காலமாகிவிட்டார் என்று சில தினங்களாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதையடுத்து நடிகை சாரதா வீட்டிற்கு போன் செய்து பலரும் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். இதுகுறித்து அவரே விளக்கம் அளித்திருக்கிறார். அதில், நான் உயிருடன் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்த நோய் நொடியும் இல்லை. அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஒருத்தரைப் பற்றி வதந்தி பரப்புவதற்கு இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் யாரும் இறங்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.